பாவமும் படுகுழியும்

தானாய்ச் செய்கிற தவறுகளின் தொடக்கம்,
வீணாய் விட்டுவிலகுவதில்லை விதியை,
ஒரு ஆச்சரிய அடியை அது வழங்காதவரை,
அத்துமீறல் அத்யாவசியமில்லாத செயல்,
உன் சுதந்திரம் தாங்கி நிற்கிறது பெருநிழலை,
அதில்நின்று உனக்கு யோசித்தலே நலம்,
ஏனெனில் எவர்க்குமுண்டு அவரவர் தனிமை,
அங்கே சரிசெய்துகொள்வர் தம் கயமைகளை,
தண்டிக்கப்படாதது வெற்றியின் வாசல்தொடுகையில்,
எக்காளமிட்டு சிரிக்கிறது கிடைத்தனவின் போதை,
அங்கே துவங்கும் ஆட்டம் நிற்காமல் நகர்த்தும் விதியை,
அதிலே நாதியற்றுத்தொலைதல் எவர்க்குமான விலை,
கெட்டும் பட்டும் போதல் இயல்பாய் நடந்துவிடுவது,
எளிதாய் அதுதாண்டி நின்று நிலைத்தலே நிதர்சனம்,
தொன்று தொட்டு படர்தலே பண்பாடு கலாசாரம்,
நீ பண்பாடு நின்றிடு பாழ்படாமல் பகுத்து நெஞ்சமே,
தள்ளிவிட நூறுபேர் இருக்கலாம் உன்னினை நெருங்கி,
ஒன்றுபுரி விழுந்தால் அது உன் சவக்குழியாய் இருக்கட்டும் !
நின்று நிதானித்து யோசி இனக்கவர்ச்சி பணக்கவர்ச்சி விடுத்து,
கொன்றுபோட்டுவிடு பலிபாவமெலாம் இரக்கம் பார்க்காமல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (27-May-15, 9:16 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 45

மேலே