எது காதல்
காதலென்ன...
போன ஜென்மக் கடனா...?
வட்டியோடு திருப்பி
என் கணக்கில் செலுத்து
என காலம் கடந்தும்
காதலியை தொல்லை செய்யும்
கயவர்களே!
காலத்தில் பெறாத போது
கடனே திரும்பக் கிடைக்காது!
காதலை களவாட வந்த
களவாணிகளே!
கண்மணியாய் பெண்மையைக் காக்காமல்
வாயிலேயே கற்பழிக்கும் காமுகர்களே!
மிரட்டி,அதட்டி,சித்ரவதை செய்து பெறும்
எதுவும் உண்மையாகிட முடியாது!
அதைக் கொண்டு
அவமானங்களையே வெகுமானங்களாய்
அள்ள முடியும்!
அன்பினால் மட்டுமே அன்பை பெறமுடியும்!
வம்பினால் வம்பை மட்டுமே செய்யமுடியும்!
காலம் கடந்து பெண்ணை
தொந்திரவு செய்பவர்கள்
காதலைக் கூட காதலினால் கேட்கமாட்டீர்கள்
குரோதத்தினால் மட்டுமே !
வக்கிர எண்ணங்களில்
வலை பின்னி
வஞ்சிகளை சிக்கவைத்து
அஞ்சாமல் அக்கிரமங்களையும்
துஞ்சாமல் துரோகம் செய்து
வஞ்சம் தீர்ந்ததும்
தஞ்சம் புகுந்திடும் நித்திரையில்!
அதுவரை
நித்திரையில் மனம்
முத்திரை பதிக்காது!