சொந்தங்களில்

கோபங்கள் சொந்தமானால்
சொந்தங்கள் தூரமாகும்!
குரோதங்கள் சொந்தமானால்
சொந்தங்கள் விரோதமாகும்!
வஞ்சனைகள் சொந்தமானால்
சொந்தங்களில் வாஞ்சை போய்விடும்!
அவமானம் வெகுமானங்களானால்
பந்தங்கள் பிரிந்திடும்!
துரோகங்கள் சொந்தமானால்
சொந்தங்கள் தங்களை இழக்கும்!
பரிவுகள் மட்டுமே
பிரிவுகளையும் பின்னி உறவாக்கிடும்!
நேசங்கள் மட்டுமே
பாசங்களை சேர்த்திடும்!
அன்பால் மட்டுமே
அன்பை சேகரிக்க முடியும்!
பண்புகளால் மட்டுமே
மாண்புகள் பெறமுடியும்!
அன்பான நம் குடும்பத்தையே
அன்பளிப்பாய் பிறருக்கு தரலாம்!
வம்பாய் பிறர் உறவுகளையே
தும்பாய் பறக்கவிட
அம்பாய் இதயத்தை துளைத்திட
வார்த்தைகளே உதவிடும்!
சொந்தங்களில்
சோகங்களை சுமக்கச் செய்யும்
சுகங்களை அழித்திடும்
சங்கடங்களை தந்திடும்
அகந்தை,வன்மம்,குரோதம்
இவைகளை தகனம் செய்திடுங்கள்
உறவுகளுக்கு அல்ல!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (28-May-15, 6:35 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 61

மேலே