அழகென்பது யாதென

" லாவண்யரேகா " என்ற ஒரு மராட்டிய கவிதையின் தமிழாக்கம் -
எழுதியது மராட்டிய கவிஞர் திரு B.B. போர்கர் அவர்கள்...

"சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு"...
என்னால் முடிந்த அளவில் தமிழாக்கம்
=======================================================================


நிறம் எதுவாயினும்
கனிவு மிக்கதென்றால்
அதுவே அழகான முகம் !

பிறர் துன்பம் கண்டு
கருணையால் நீர்வடிந்தால்
அவையே அழகிய கண்கள் !

இனியவை பகிர்ந்து
வாய்மையைப் பேசிடும்
அவையே அழகிய உதடுகள் !

படைப்பால் உள்ளத்தின்
தூய்மை மணம் தெளிக்கும்
அவையே அழகிய கரங்கள் !

பாலைநிலத்திலும் உறுதியின்
சுவடுகள் பதித்துச் செல்லுகின்ற
அவையே அழகிய பாதங்கள் !

கடமையின் சுமைதனை
இச்சையோடு தோளிலேற்றும்
அவையே அழகிய கரங்கள் !

நிறைவான உள்ளத்தால்
வாழ்நாள் ஒளிமயமானதெனில்
அதுவே அழகிய வாழ்க்கை !

விழு ஞாயிறுபோல் இருளிலும்
நம்பிக்கை ஒளி விட்டுச் செல்லும்
அதுவே அழகிய மரணம் !

எழுதியவர் : ஜி ராஜன் (28-May-15, 5:37 pm)
பார்வை : 130

மேலே