மீட்க தவறிய மீதங்கள் - தேன்மொழியன்

மீட்க தவறிய மீதங்கள் .
~~~~~~~~~~~~~~~~~~~~
நித்திரை விற்ற இரவொன்றில்
வளைந்து நெளியும் நாணத்தை
முதுகின் மோதல் விரித்திடுமோ ..?
தயங்கி தழுவும் தேகத்தில்
மயங்கி அவிழும் தாகத்தை
இதழின் வரிகள் நிறைத்திடுமோ ..?
பரந்து படரும் போர்வைக்குள்
ஒளிந்து உரசும் புருவத்தை
நுனிவிரல் தாவல் வருடிடுமோ ..?
நுரையென உடையும் வெக்கத்தில்
சிறையாய் சூழ்ந்த அச்சத்தை
கழுத்தின் அழுத்தம் கவிழ்த்திடுமோ..?
உறைந்து உருளும் என்னுடலில்
இறந்து உதிரும் இதயத்தை
எந்த தீண்டல் மீட்டு தருமோ ..?
- தேன்மொழியன்