இகல் மனத்தோரையும் பழமொழி கவிதைகள் - பாகம் -1
மரத்தை நட்டுவைப்பவனுக்கு
மட்டுமல்ல
மரத்தை வெட்டுபவனுக்கும்
மரம் நிழல் தரும்!
மண்ணை காப்பவனுக்கு
மட்டுமல்ல
மண்ணை தோண்டி அள்பவனுக்கும்
மண் இடம் தருகிறது!
வாழ்க்கையும் அப்படியே
வாழ்ந்திடுவோம்!
அகழ்வாரை தாங்கும் நிலம் போல
இகழ்வாரைப் பொறுத்தும்,
இகல் மனத்தோரையும்,
போலி மனிதர்களையும்
அசல் அன்பினால்
ஊசலாடும் பாசங்களை
புதுப்பித்திடுங்கள்!