உன் காலடியில்

நீ என்னை கடந்து போகும்
நிமிடங்களில் தான்
நான் என்னை விட்டு
தொலைந்து போகின்றேன்...

என்னை நிமிரவிடாமல்
செய்யும் அந்த நிமிடங்களே
கண்ணீரில் கலந்த கவிதைகளை
உன் காலடியில் சமர்பிக்கும்.

எழுதியவர் : parkavi (28-May-15, 9:35 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
Tanglish : un kaaladiyil
பார்வை : 111

மேலே