என்னவள்

மை இருட்டினை மத்து
கொண்டு கடைந்தெடுத்து
மயிலிறகு போல்
மயிரிறகு செய்து அதை கூந்தலாக
தலையில் குடியேற்றியவள்தான்
என்னவள்...
பீய்ச்சிய பால் எடுத்து அதை
காய்ச்சி பின் காய வைத்ததில்
ஊற்றிய ஒரு சொட்டு தேன்போல
நெற்றியில் ஒரு பொட்டு
வட்டமாக ஒட்டியவள்தான்
என்னவள்...
உயிர் கொண்டு சிமிட்டும்
இரு இமைகளுக்குள் என்
உயிர் தின்று உருளும்
இரு விழிகள் உடையவள்தான்
என்னவள்...
வெட்டிய கனி தரும்
சுவையினை மிஞ்சும்
ஒட்டிய இதழ்கள் கொண்டவள்தான்
என்னவள்...
பெண்ணவளான எல்லையில்லா
அழகினைக் கொண்ட என்னவள்
எனக்காக எல்லை போட்டுக்
காத்திருப்பாள் எங்கள்
இருகரம் பிடிக்கும் வரை
இருதயம் துடிக்கும் வரை...
செ.மணி