கொலுசு

நம் முன்னோரெல்லாம் முட்டாள்கள் என்ற நம் எண்ணத்தின் வெளிப்பாடே கொலுசு அணிவது பெண் அடிமைத்தனம் என்ற எண்ணம் வரக்காரணம் .நம் எண்ணத்தை மாற்றி இப்படி சிந்திப்போம் . இன்றுபோல அன்று பாதைகள் அகலமின்றி ஒற்றையடிப் பாதையாக இருந்தது .அந்தப் பாதையில் வெறும் காலுடன் தண்ணீரை சுமந்து வரும் பெண்கள் முன்னே செல்லும் ஆண்களை வழிவிடச் சொல்ல நாணம் கொண்டு தயங்கிய நிலையைக் கண்டு .கொலுசு அணிந்தால் அதிலிருந்து வரும் சத்தம் கேட்டு ஆண்கள் விலகி வழிவிடலாம் என்று எண்ணியிருக்கலாம் .அவ்வாறு வழிவிடும் ஆண்களின் பெருந்தண்மைக்கு தலைவணங்க எண்ணிய பெண்கள் ஆண்களின் முன்னால் தரையைப் பார்த்து தங்களின் நன்றியைத் தெறிவித்திருக்கலாம் .அதையே தங்கள் பெண் பிள்ளைகளும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அவர்களிடம் ஆண்களின் முன் தரையைப் பார்த்து நடயெனக்கூறி வளர்க்க நாளடைவில் சமத்துவம் கண்ட பெண்கள் கொலுசு அணிவது பெண்ணடிமைகாக ஆண்கள் செய்தகாரியமாக மாறியிருக்கலாமில்லையா தோழிகளே

எழுதியவர் : moorthi (30-May-15, 2:08 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : kolusu
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே