அதிகாரம்
எதிரில் வந்து
தலை கவிழ்ந்து நின்ற
இளம் பெண் பணியாளரை..
ஏறிட்டு நோக்கிய உயர் அதிகாரி
முகத்தில்
கடுகு வெடித்தது!
..
எத்தனை தடவை
விடுமுறை எடுப்பீர்கள்..
ஒரு மாதத்தில்..
ம்ம்..
ஒன்றும் சரியில்லை..
நான்கு மாதத்தில்
பதினாறு நாட்கள் என்றால்..
ம்ம்..
நாளைக்கு மீண்டும் வந்து
சந்தியுங்கள்..
..
அடிக்கடி உடல்
நலமின்றிப் போவதுதான்
காரணம் சார்..
என்று சொன்னதைக்
காதில் வாங்காமல்
கணினியில்
புதுப் பட விமர்சனம்
பார்த்தபடி..
ம்ம்..
நீங்க போகலாம்..
என்றதும் வெளியேறிய
பெண்ணின்
பின்னால்
இரு விழிகள்
வெற்றிப் புன்னகையோடு
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
என்ற நினைப்பில் !
..