வாய்ப்பே இல்லை

இவர்கள் சேர்ந்து வாழ
வாய்ப்பேயில்லை இனி..
என்று எண்ணியபடி வக்கீல்..
ஏதேதோ பேசிக்கொண்டிருக்க..
..
ஒரு மின்னலின் வெளிச்சக்கீற்று
தோன்றி மறையும் நேரத்தில்
எடுத்த முடிவோடு..
வாழலாம் வா..
என்று எழுந்தான்..
மனைவியின்
கையை பற்றியபடி..
வக்கீலுக்குப்
புரியவேயில்லை
ஒன்றும் ..
..
அவள் விழிகளில் இருந்து
விழுந்த இரண்டு சொட்டு கண்ணீர்
அவன் கைகளில் விழுந்ததை
அவர் கவனித்திருக்க
வாய்ப்பேயில்லை!


..

எழுதியவர் : கருணா (30-May-15, 4:25 pm)
பார்வை : 423

மேலே