காதல் டு கல்யாணம்
என்னுயிரே..
என்னன்பே ..
கண்களை மூடி கண்ட காதல் கனவுகளை
இன்று கண்களை திறந்து கொண்டு என் மனைவியாக
காணவைக்கிறாய்!..
என்னுடன் நீ இருக்கும் ஒவ்வொரு
மணித்துளியும்,
ஒவ்வொரு உகங்களாக மாற வேண்டும்!
ஏழு பிறவி என்று நம்பிக்கை
இருந்தால்,
நான் உனக்கான கணவனாக
நீ எனக்கான மனைவியாக
கையை பற்றி இன்று போல் வாழ வேண்டும்
துணையாக என்றும்....
அன்புக்கு அளவுகோல் வைக்க
உன்னைத்தான் அழைக்க வேண்டும்,
எல்லையின்றி நீ காட்டும் அன்புக்கான
அளவை உன்னால் தான் வரையறுக முடியும்
என்பதால்....
திருமண பந்தத்திற்கான அர்த்தம்
திருவை பெண்ணென்ற அன்பு மணமாக்கி
முழுமையாக்குவதலோ அன்பே...
போதுமடி என்மேல் பொறமை கொள்ள வைக்கும்
பொண்டாட்டி உடனான வாழ்க்கை வாழ்த்து விட்டு
செல்கிறேன்.
உள்ளம் குளிர்ந்த அன்புடன் மீதி நாட்கள்!!!.