என் காதலி

என் காதலி

காதல் கண்ணாமூச்சி ஆடுகின்றாள்
என் காதலி.!!!!

அருகிலிருக்கையில் வெகுளித்தனத்தால்
குமரியா..? குழந்தையா..?
என திணற வைக்கின்றாள்..!!

அவள் செய்யும் குறும்புகளால்
சில நேரங்களில் என் கோபத்தையும்
சீண்டித்தான் பார்க்கின்றாள்...!!

பட பட வென பேசியே கொல்கின்றாள்
போதும் நிறுத்து என
சொல்ல தோன்றியதில்லை
உன் முகபாவனைகள்
கதைகளுக்கு ஜோடனை செய்யும் அழகை கண்டு...!

கொஞ்சலாய் காதல்மொழி பேச
வேண்டுவதில்லை என் கண்மணிக்கு
அவள் சொல்லும் வார்த்தைகளே
கொஞ்சும் மொழி தான்...!!

ஆசைப்பட்டதை அடையும்போது
அவள் கண்களில் தோன்றும் சந்தோஷம்,,,,

""இவள் என் குழந்தை"" என்றே சொல்கிறது

எழுதியவர் : ஷாமினி குமார் (31-May-15, 6:20 pm)
சேர்த்தது : ஷாமினி அகஸ்டின்
Tanglish : en kathali
பார்வை : 307

மேலே