புரட்சி இயக்குனர்

நிருபர்:: சார் நீங்க திரைப்படத்துறையில் ஒரு பெரிய புரட்சியைச் செய்யப்போறாதா எல்லாம் பேசிக்கிறாங்க. அது என்னன்னு இந்த நிருபர் கூட்டத்திலெ சொல்லுங்க சார்.

இயக்குனர்:: இதுவரைக்கும் சினிமாத்துறையின் பல துறைகளிலும் தமிழ் தெரியாதவங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவுங்க எல்லாம் வெற்றிக்கொடி கட்டி பல வருஷம் கலைத் துறைக்குச் சேவை புரிஞ்சிருக்காங்க. தமிழரல்லாதவர்கள் இன்னும் சேவை புரியாத சினிமாத் துறைகள் இரண்டுதான் உள்ளது.

நிருபர்:: என்னென்ன துறைகள்-ன்னு நீங்க சொல்லுங்க சார்.

இயக்குன:: பாடல் துறையும் உரையாடல் துறையும் தான். இந்த இரண்டு துறையிலும் தமிழ் தெரியாதவங்களை அழைத்து நான் இயக்கும் படங்களுக்கு பாட்டு உரையாடல் எல்லாம் எழுத வச்சு 'புரட்சி இயக்குனர்'ன்ற பட்டத்தை எம் பேருக்கு முன்னாடி போட்டுக்கப் போறேன்.
நிருபர்:: தமிழ் தெரியாம எப்பிடிங்க சார் அவுங்க பாட்டு உரையாடல் (வசனம்) எல்லாம் எழுதுவாங்க?

இயக்குனர்:: ஏய்யா அதெல்லாம் தெரியாமையா நான் இந்தப் புரட்சியைச் செய்யாபோறேன். திரைகதை மற்றும் காட்சிகளை நாங்க தமிழிலே விளக்கமா விரிவாப் பேசி அதைப் டேப் ரிக்கர்டர்லே பதிவு பண்ணிக் கொடுப்போம். அவுங்க காதாலே கேக்கற தமிழ் வார்த்தைகளிலிருந்து அவுங்களுக்குப் பிடிச்ச வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து வசனமும் இசையமைப்பாளரின் இசைக்குத் தகுந்த வார்த்தைங்களப் போட்டு பாடல்களையும் எழுதுவாங்க.

நிருபர்:: சார் அது தமிழக் கேவலப்படுத்தனமாதிரி ஆகிடுமே.

இயக்குனர்:: ஏய்யா தமிழக் கேவலப்படுத்தறதிலே தமிழராகிய நாமதாய்யா தலைமை தாங்கறோம். அது போதாது தமிழ் தெரியாதவங்கள அழைச்சுட்டு அவங்களத் தமிழிலே பேச வச்சு தமிழ பேசும் படம் வந்த நாள்லே இருந்து கேவலப்படுத்தறதுதாய்யா தமிழரின் உய்ர்ந்த பண்பாடு . அந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றித் தான் நா இந்தப் புரட்சியைச் செய்யப் போறேன். வாழ்க தமிழ்!

*********
முடிந்தால் சிரிக்கவும்.

எழுதியவர் : மலர் (1-Jun-15, 7:15 pm)
Tanglish : puratchi iyakkunar
பார்வை : 153

மேலே