பாடா படுத்துறான்
மச்சான் இரவைக்கு மழை பெய்யும் மாதிரி இருக்கே!!
"ஏன் மச்சி அப்படி சொல்லுறே!"
வானம் எல்லாம் கருத்து இருக்கு அதான்
"அடப்பாவி இப்ப நேரம் இரவு 9மனி டா வானம் கருக்காம சிவப்பா இருக்கும்"
இல்லைடா எங்க மிஸ் எல்.கே.ஜி.லே இப்படி தான் சொல்லித் தந்தங்க
"ஹா...ஹா.....அத அப்பயே ஆன்சர் சீட்டுலே எழுதி இருந்தா இப்படி தாடி முளைச்ச பின்னாடியும் காலேஜுக்கு செல்ல வேண்டி இருந்து இருக்காது போல"
போடா நீங்க எல்லாம் பொறுமைசாலி இல்லை அதான் இப்படி வேகமா பள்ளியை விட்டு போய்த்திங்க.
"சரி மச்சான் நேரம் போய்ட்டு தூங்க போறேன்"
டேய் இறப்பர் கயிறுல தூக்கு போடு அதான் சீக்கிரம் உயிரை போகச் செய்யும்
நீ எல்லாம் ஒரு மனிசன் என்று உன்னோடு பேசியமைக்கு எனக்கு செருப்பளால அடிக்கணும்
"இப்படி தான் வழமையா சொல்லுறாய் அடித்து நான் கண்டதே இல்லையே!! உன்னோடு பேசினா என்னை பைத்தியம் என்று அக்கம் பக்கம் நெனைச்சுக்கும் நான் போயிட்டு வாறன்"
"போ ஆனா...."
என்னடா....
" ஒன்னும் இல்லை சாமி (மனதுக்குள் பாடா படுத்துறான் சபா)