நீ தான் இனிமேல் சிறந்த நகைச்சுவை நடிகர்

நீ தான் இனிமேல் சிறந்த நகைச்சுவை நடிகர்.

ஏப்பா உன் தாய் மொழி தமிழ் கெடையாது. நீ தமிழைக் கடிச்சுக் கடிச்சுத் துப்பறது நல்லா ரசிக்கும்படி இருக்கு. இதைத் தான் தமிழ் ரசிகர்களும் விரும்பறாங்க. அதனால தான் நாங்கள் சின்னத் திரையிலும் சினிமாவிலேயும் தமிழை தாய் மொழியாப் பேசாதவங்களுக்கே அதிக வாய்ப்புக் கொடுக்கிறோம். அதோட நீ செய்யும் கொரங்கு சேட்டையெல்லாம் ரொம்ப புதுமையா இருக்கு.. இந்த சேட்டைகளைத் தான் எங்கள் தமிழ் ரசிகர்கள் கதாநாயகர்களிடமும் எதிர்பார்க்கறாங்க. வடிவேலு விவேக்குக்கு அப்பறம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை சகாப்தம் முடிஞ்சிருச்சின்னே நான் நினைக்கிறென். என்னுடைய படத்திலெ நீ தான் ஹீரோ ; நீ தான் நகைச்சுவை நடிகன். உனக்கு சம்மதமா?

ஆயோ ஏமி சாரு இப்பாடி செப்பி நாவு தாயாரா இரிக்கேன். எனிக்கி சான்ஸ்சு கொடுத்து சூடுங்கோ . நாவு அரிமையா நாடிச்சுக் கோடுப்பேன். .



============================
சிரிப்பதற்கு அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (1-Jun-15, 12:29 pm)
பார்வை : 174

சிறந்த நகைச்சுவைகள்

மேலே