புகழ்ச்சி

இது மனிதரை என்றும்
மமதையாக்கி விடும் மா மருந்து !
புகழ்ச்சியை விரும்புவோர் தன்னை
துதிப்பவருக்கு பரிசளித்து உபசரிப்பார் !
இனி மாறுவதில்லை ...............
இறுதிவரை இவர்கள் ?
இன்னும் தன்மானத்தை விட்டு -
சன்மானம் பெற்று செல்வோர் -
வாழும் வரை ......................
புகழ்ச்சிதான் !!
ஸ்ரீவை.காதர்.