ஒரு கட்டிங் கிடைக்கலயே
குவார்ட்டரை
இரண்டாகப் பிரித்தேன்
கட்டிங் என்றான்.
குளிர்பானம் கலந்தேன்
நண்பா மிக்சிங்
சூப்பர் என்றான்.
கண்களின்
மொழியறிந்து
அப்படியே ஆகக்கடவ என
இன்னொரு குவார்ட்டர்
வாங்கினான்.
இரண்டாக பிரிக்காதே
முழுவதும் உனக்கே
என்றான்.
கஷ்டப்படாதே
கலந்து ஊத்த
தண்ணீரே போதுமென்றேன்.
பழைய காதலியை
பற்றி நான் உளற
சோகம் ஆற்ற
இன்னொன்று வாங்கினான்.
தண்ணீர்க் குடுவையை
அவன் திறக்கும் முன்
சுத்தமாக சுடச்சட ஊற்றினேன்.
ராவாக சென்றதில்
இராத்திரி பகல்
தெரியவில்லை
ஞான சூனியத்தில்
நான் ஓட்ட அடம்பிடிக்க..
என்ர தளபதி
நீயென கட்டிப்பிடித்து
சட்டையில் துப்பித்துடைத்து
நட்புத் திருப்பணியாற்றிய பின்
சாவியை என் கையில் திணிக்க..
முறுக்கென திருக்க
விருட்டென வந்தவன்
என் மண்டை நசுக்க
அடித்த சரக்கு எமலோகம் வரை
மைலேஜ் தந்திருந்தது..
மறு நாள்
சுரண்டி எடுத்த எனது
பிணத்தின் முன்
அப்பா அம்மா கதறிக் கதறி
அழுதுக்கொண்டிருக்க..
என் இறுதிச் சடங்கில்
வந்தவர் இருவர்
ஆழ்ந்த சோகத்தில்
முனுமுனுத்தனர்..
கவலையை குறைக்க
கட்டிங் கூட கிடைக்கலயே
இன்றைய நாள் அதுவும்
சுதந்திரதினமாய் போச்சே..
--கனா காண்பவன்
......................................
#I support Nandhini#
விவரங்களுக்கு சரவணா அவர்களின்
இந்தக் கவிதையை வாசிக்கவும் .. கவிதை எண்:246869 .......................................