இன்றைய நிலை இதுவே
()()()*********************************()()()
மனிதமும் நேயமும்
மறைந்தபின் மண்ணிலே
மனிதாபிமானத்தை தேடுவது என்பதும் .....
விளைநிலமும் வயல்வெளியும்
விண்ணைத்தொடும் வீடானபின்
விவசாயத்தை தேடுவது என்பதும் ......
புதைகுழியில் இறங்கியபின்
புண்ணிய பூமியில் வாழ்கிறோமென
புலம்புவது எவரும் என்பதும் .....
விழிகளை மூடியபின் இருளில்
விளக்கினை தேடுகிறோம் என்றே
விளங்கினால் போதும் .
இன்றைய நிலை இதுவே .....
பழனி குமார்
02.06.2015
()()()()()()()()()())()()()(())()()()()()()()()()()()()()()()()()