அலைபேசி ஆப்புகள்

ஆணென்ன
பெண்ணென்ன
சமஉரிமை அலைபேசியில்!
இதில் மட்டும்
இரகசியங்கள் தங்குவதில்லை!
நொடிப்பொழுதில்
நடந்துமுடிந்திடும்
வதந்திகளின் வெளியீடு!
வம்பிழுக்கவே வந்த
வாட்ஸ்அப்,முகநூல்
விதவிதமாக ஆப்புகள் இவைதான்!
தேவைக்கு பயன்படுத்துவதை விட
தேவையில்லாமல் பயன்படுத்துவோரே அதிகம்!
வெறும் வாயில் அவல் மெல்லுபவர்கள்
வெறும் கையில் வரும் மெல்லிசை கீதங்கள்!
தட்டி தட்டி தட்டான்கள் எல்லாம்
துண்டாகுமோ விரலே துண்டாகுமோ
தூங்கையிலும் தூங்காத
தூங்கா விளக்கென்ப அலைபேசி
தூக்கியவன் மனத்தினுக்கு!
பூபாளமும்,மங்களமும் இது
இசைத்தாலன்றி இசை இல்லை
பல பேருக்கு!
வாழ்க்கை பயன்பாடுகளின் ஓரங்கம்
வாழக்கையையே ஓரங்கமாக மாற்றிவிட்டதே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Jun-15, 8:46 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 175

மேலே