என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா

பள்ளிப்படிப்பு
முடிக்குமுன்னே
பக்கத்தில் அலைபேசி
போர்வைக்குள்ளும்
புத்தகத்திற்குள்ளும்
புதைத்து வைத்து
பொழுதன்றும் பேசி
போயே போயிடும் நாட்கள்
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..?

பட்டப்படிப்பு காலத்திலும்
பரீட்சை வரும் நேரத்திலும்
பதட்டமே இல்லாமல்
படம் பார்த்து
பயமே இல்லாமல்
பாஸ் செய்திடும் மாணவிகள்
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..?

வேலைக்குச் சென்றாலும்
வேலை என்னவோ
ஸ்மார்ட் போனுடன்தான்
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...?

கல்யாணம் செய்தாலும்
கணவன் என்னமோ
கைபேசிதான்
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...?

குழந்தையே பிறந்தாலும்
குழந்தைக்கு பால்புகட்டுவதை விட
கைக்குழந்தை போல்
கைபேசி
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...?

குடும்ப வேலைகளினும்
குதூகலமாய்
கொஞ்சி குலவ
வாழ்க்கையே
வலைதளத்துக்குள்
வளைந்துவிட
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (8-Jun-15, 3:06 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 210

மேலே