அவர்கள் பொறுப்பல்ல
புதுமாப்பிள்ளை
புதுப்பொண்ணு
புதுமண தம்பதி
இவ்வாறாக
அழைக்கப்பட்டனர்
அந்த காதல் ஜோடி
பல இன்னல்களை
கடந்து
இனிமையான
ஒரு காலைப்பொழுதில்
ஊடல் கொஞ்சமும்
காதல் கொஞ்சமும்
இன்பம் கொஞ்சமும்
பரிமாறிக்கொள்ளப்பட்டன
நீண்ட நெடிய
பயணத்திற்கு முன்பு
இரு சக்கரத்தில்
புறப்பட்டது வாகனம்
அவன் நகைத்தான்
அவள் நாணம் கொண்டாள்
மிக நீண்ட நெடிய
பயணத்தை முடித்து
கைகோர்த்து திரும்பிய
வெகு சீக்கிரமே
ஆழ்நிலை உறக்கத்திற்கு
சென்றுவிட்டிருந்தனர்
இருவரும்
யார் கண்ணு பட்டுச்சோ.........
மிஸ்டேக் இவுங்க மேல இல்லையாம்.......
நம்பர்லாம் நோட் பண்ணியச்சாம்.......
யாரோ போதையில ராங் சைடுல.......
இவுங்க ரெண்டு பேரும் ஸ்பாட்லயே.......
இவ்வாறான
சில கதறல்களும்
சில அழுகைகளும்
சில ஆற்றாமைகளும்
சில பரிகாசங்களும்
சில தகவல்களும்
நிரப்பட்டிருந்தன
அந்த இறுதிச்சடங்கில்
*******************************************************************************
#I support Nandhini#
உந்துதலுக்கு நன்றி தோழர் சரவணா
விவரங்களுக்கு வாசிக்கவும் : கவிதை எண் - 246869
*************************************************************************