சமத்துவம் தழுவு--------அஹமது அலி----------
சாதி ஒழி
நீதி வழி
மடமை அழி
மனிதம் அளி
#
ஒன்று குலம்
ஒன்று தேவன்
நன்மொழி படி
#
மேலோர் கீழோர்
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
இழிமொழியைப் பழி
#
அனைவரும் சமமெனும்
அன்பு நெறி
தேடிப் பிடி
#
மனித வாழ்க்கைக்கும்
சுய மரியாதைக்கும்
அதுவே ஏணிப்படி
#
பெண்களுக்கு
கண்ணியமெங்கே
மானக்கேட்டிலிருந்து
பாதுகாப்பெங்கே
கண்டுணரு
#
மாராப்பை பிடுங்கி
வீதியில் விட்ட
மதிகேட்டை உதறு
#
மோகப் பொருளாய்
தேகம் திறந்து பார்க்கும்
சமூகத்தின் (அ)நாகரீகத்தை
காரித்துப்பு
#
மலத்தை சுமக்கவும்
வாயில் திணிக்கவும் செய்த
சாதி வெறி பிடித்த மிருகங்களை
காட்டுக்குள் விரட்டு
#
கட்டித் தழுவும்
சகோதரத்துவம் எங்கே என்று
கெட்டியாக பிடித்து
தீண்டாமையை அகற்று
#
சாக்கடைக்குள் மூழ்கிக் கொண்டே
மூக்கை பிடித்தென்ன
வெளியே வந்து தேடிப் பார்
நறுமணம் உன் நாசிக்கும் உண்டு!