இதற்கு பதில் இது
பண்டமாற்று வியாபார வாழ்க்கைக்கு
பழகிப்போய் விட்டதாலோ என்னவோ..
..
செலுத்தும் அன்புக்கும்,
காட்டும் நன்றிக்கும்,
செய்யும் உதவிக்கும்
வணக்கத்திற்கும்,
புன்னகைக்கும்
எல்லாவற்றிற்கும்..
பதிலுக்கு
ஒன்று வேண்டி
நடத்துகின்ற வாழ்க்கையில்
விதி விலக்காய்
ஏதாவது இருக்கிறதா
என்று கேட்டார்
வந்தவர்..
சொன்னால் என்ன தருவீர்கள்
என்றேன்..
போனவர் திரும்ப வரவில்லை!