ஜுஜிபி ஜுஜிபி

ஜுஜிபி ..ஜுஜிபி
டமாரம் ..டமாரம்..
கிழியுது..கிழியுது..
வாய்ப்பறை கொட்டிடும்
டமாரம் ..டமாரம்..
கிழியுது..கிழியுது..

பேச்செலாம் விகாரம்..
முகத்திலே அரிதாரம்..
பட்டுப் பீதாம்பரம்
பிச்சை ஆகாரம்
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
போட்டி மேல் போட்டி

சரக்..சரக்..
வெட்டும் ..குத்தும் ..
வீசுது நாற்றம்..
கேட்கப் போனவன்
முதுகில் பல அடி!

கண்ணாடி காட்டுது
லட்சணம் ..அவலட்சணம்..
உற்றுத்தான் பார்த்திட
உள்ளது தெரிந்திடும்..
உண்மை புரிந்திடும்!

ஜுஜிபி ..ஜுஜிபி
ஜுஜிபி ..ஜுஜிபி
உன் உயரம் ..
நீ அறி!

எழுதியவர் : கருணா (4-Jun-15, 10:39 am)
பார்வை : 203

மேலே