புனிதப் பயணம் -உண்மை கற்பனையுடன்
புனிதப் பயணம் -உண்மை கற்பனையுடன்
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் ஒன்றில் இரவு பயணம் இனிதாய்த் தொடங்கியது . இடைபட்ட நிறுத்தங்களையும் டீ காபி சப்தங்களையும் ரசித்தபடி தொடர்ந்தது . கொண்டுவந்த உணவுகளை உண்னும் போதே ரயில் நட்பும் உதயமானது .வயதுக்கேற்றபடி உரையாடல் முடித்து என் நண்பர் உறங்கிவிட சன்னலோர நிலவை ரசித்தபடி நானிருந்தேன் .எதிர் பக்கம் அமர்ந்திருந்த பெண்கள் பேச்சு என்னை கவர்ந்தது .எதிரே வயதான மூதாட்டி மகளுடன் வந்திருந்தார் .அவர் படுக்க உதவ சிலர் இறங்கி இருக்கை தந்தனர் . சீட்டீல் சிறிது நேரம் உறஙகிவிட்டு கீழே இறங்கி படுத்துகொண்டு தன் மகளை சீட்டில் படுக்க வைத்தார் . சிறிது நேரத்தில் அந்த பாட்டி எழுந்து அவள் மகளை பார்தபடியே உறங்காமல்அமர்ந்திருந்தார் .அவர்கண்களில் ஏதோ ஒரு களக்கமிருப்பதை என்னால் உணர முடிந்தது .அந்தப் பாட்டியின் மகள் அருகிலிருந்த வடமாநில நபருடன் பேசிக்கொண்டு இருந்தார் .அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்தவர் தான் ஒரு கடவுளுளின் தீவிர பக்தன் என்றும் அக்கடவுளுக்கு சேவைசெய்ய என் உறவுகளை உதறிவிட்டு புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளதாக கூற இதைக்கேட்ட பாட்டியின் மகள் தான் தனது அம்மாவுடன் திண்டுக்கல் சென்று ஒருமணி நேரத்தில் மீண்டும் திருச்சி வரவேண்டும் எனவே தனது தாயை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கிவிட உதவ வேண்டினாள் .அவரும் சம்மதிக்க இருவரும் பாட்டியை இறக்கி மரத்தடியில் அமரவைத்தவிட்டு மீண்டும் ரயிலில் பயணத்தை தொடர்ந்தனர் .தன் அம்மாவை இறக்கிவிட்டதற்கு நன்றி சொன்னவளைத்தடுத்த வடமாநில நபர் தனது புனிதப்பயத்தில் இவ்வுதவியும் சேர்ந்தாக கூறிவிட பயணம் முடிந்தது. 2நாள் கழித்து திரும்பி வரும்போது அந்தப் பாட்டி இறக்கி விட்ட அதே இடத்தில் உறங்க கண்டபோது.. என்னுள் சிலகேள்விகள் 1அம்மாவை கழற்றிவிட்ட மகள் 2 புனித சேவையென்று பாவம் செய்த யாத்திரிகர் 3 அனைத்தையும் விலகிநின்று பார்த்த நாம் இவர்களில் யாருடையது புனிதப்பயணம்? சொல்லுங்கள் நட்பூகளோ