தல புராணம் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி- உதயா
வணக்கம் தோழர்களே / தோழிகளே
மதிப்புக்குரிய ஐயா திரு பொள்ளாச்சி அபி அவர்களின் கைவண்ணத்தில் மெருகேற்றப்பட்ட படைப்புகளில் ஒன்றாத தல புராணத்தை பற்றி இச்சிவனின் சில கிறுக்கல்கள் ..
நெடுந்தூரப் பயணத்தில் விருட்சத்தின் அரவணைப்பில் பயணிக்கும் இரு பவளமல்லி மலர்க்களை பக்குவாமா கதையில் இணைத்துள்ளார் கதை ஆசிரியர். செயற்கையான பானங்களை தவித்து இயற்கையின் அம்சங்களை அருந்துங்கள்/ பருகுங்கள் என தாயின் அன்பினில் சிறு அதிகாத்தை பூட்டி, ஓட்டுனர் கவனத்தில் விழியின் பயணம் சிதரக்கூடாதுயென சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் ..
அடுக்கடுக்காய் அடுக்கிவைக்கப்பட்ட கொய்யாப் பழங்கள் பிள்ளைகளின் மனதினை களவாடி சென்றதை அறிந்த தாய். கன்றின் பசியறிந்த பசு கயிறினை அறுத்துக்கொண்டு சென்று பாலினை கொடுப்பது போல அவர்கள் வேண்டும் என கேட்பதற்கும் முன்னே அழைத்து சென்று வாங்கி கொடுத்ததில் தாயின் பாசத்த்தினை தரணியெங்கும் தூவ வைத்துள்ளார்
கானல் நீரில் தத்தளித்து புதர்களின் குடிலில் தஞ்சம் புகுந்த கிழவியை கண்டும் காணாமல் செல்லும் மக்களுக்கிடையே இவ்வுலகமெனும் நந்த வனத்தில் நெஞ்சில் ஈரமாக தேனினை கொண்ட பூக்கள் பூப்பவது வேல்முருகன்,இந்துமது போல ஒன்று இரண்டுதான் என மனிதாபிமானம் மக்களிடையே மாண்டுபோனத்தை ஆணித்தனமாக கூறி இருக்கிறார்
கோவிலுக்காக மக்கள் தட்சணையாக செலுத்தும் பணத்தினை பூசாரிகள் கள்ளத்தனமாக இன்னும் களவாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை கதை அறிய தனித்திருந்த வேல்முருகனையும், இந்துமதியினை பார்த்து பயத்தில் நடுங்கிய பூசாரியின் பயத்தினில் எடுத்துரைத்துவிட்டார் என்று தான் பாரில் மாறுமோ இந்நிலையென ஒரு கவலையுடனே
50 வருடத்திற்கு முன் நடந்த கதையினை 500 வருடத்திற்கு முன் நடந்ததாக சொல்லும் அந்த பூசாரியின் புளுகு மூட்டையை போலிஸ் கதா பாத்திரத்தை உரைத்து தவளை தன் வாயாலே பாம்பிடம் மாட்டுவது போல் வெட்டவெளியாக மாட்டிகொண்டார் அந்த பூசாரி இந்து மதியிடம் ... இதில் இருந்து பல தல புராணங்கள் சாட்சி இன்றி கட்டுகதையினால் அலங்கரிக்கப் பட்டுள்ளது .. உறுதியான ஆதாரம் இன்றி யாரும் நம்ப வேண்டாம் என ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கையும் இக்கதையில் நிலைநாட்டியிருப்பது இன்னும் சிறப்பு ..
தன் கற்புக்கு பங்கம் நேரும் நிலைவந்தால் பெண் பத்ரகாளியாவும் மாறவும் தயங்க மாட்டாள் . உயிரினை பறிக்கவும் அஞ்சமாட்டாள், என பெண்களுக்கு உணர்வு ஊட்டி ஆண்களுக்கு எச்சரிகைவிடும் வகையில் பெண்களின் தினத்தில் அன்றே இக்கவி பதிவிடப்பட்டது சிறப்பிலும் சிறப்பும்.
மேலும் இறுதியில் வேல்முருகம் புகை எடுத்த போது அந்த சிலையின் முகம் சற்று நேரத்திற்கு முன்னே காரில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த கிழவியின் முகத்தை போல் உள்ளது என்பதில் அந்த கோவில் எழுப்பபட்டு இன்னும் 100 வருடம் முழுமை அடையவில்லை " எப்படியென்றால் மகேஸ்வரி அந்த ராசாவை கொன்றதை பார்த்த அந்த மூத்த காவலாளிதான் மகேஸ்வரியிடம் நீ இங்கிருந்து சென்றுவிடு நான் சாமிதான் இந்த கொலை செய்தததுயென ஊர் மக்களை நம்பசெய்கிறேன் அவளை காப்பாற்றிவிட்டு ஊர் மக்களை நம்ப செய்வதற்காக பொய்வுரைத்து ஒரு கோவிலை எழுப்பி " ஒரு நல்வனை காப்பாற்ற பொய் உரைப்பது பொய்யல்ல " என்ற சான்றோர் சொல்லுக்கு உறுதுணை நின்றுயிருக்கிறார்..
அன்று ஊரை துறந்த மகேஸ்வரி இன்றுதான் தான் ஊரை அடைந்து இருக்கிறார் என்பதையும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார்..
பயணத்தின் போது ஓட்டுனரின் கவனம் சாலையில் இருக்க வேண்டும். என்றுமே பெற்றோர் தான் மக்களை தான் கட்டுப் பாட்டிலே வைத்திருக்கவேண்டும், குளிர் பானம் கெடுதல் இயற்கையாக கிடைக்கும் இளைநீர் போன்றவை தான் உடலுக்கு நன்மை பயக்கும், பிளாஸ்டிக் பொருட்கள் தீமையை பயக்கும், உலகில் மனிதாபிமானம் இன்னும் முழுமையாய் மாண்டு போகவில்லை இன்னும் சில உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, தன் கற்புக்கு ஆபத்து என்றால் பல ரூபம் தரிக்க தயங்க மாட்டாள் பெண் என பல கருத்துகளை முன் வைத்த செதுக்கப்பட்ட படைப்பு வெற்றியடைய தடையேதும் தடுங்கலாய் இருக்கவில்லை ..
பட்டை தீட்டும் கருவியான அவரது எழுதுகோல் இன்னும் எத்துனை வைரங்களை ஜொளிக்க வைக்க போகிறதோ காத்திருந்து பார்ப்போம் ..
இன்னும் தொடரருங்கள் அபி ஐயா தங்களின் எழுத்து பயணம் ....
****இப்படைப்பு எம்மால் ஆக்கப்பட்டது என உறுதியளிக்கிறேன் ...*****
(((இக்கட்டுரையை கிறுக்கி வைக்க வாய்ப்பளித்த தோழர் திரு.ராம் வசந்திற்கு என நன்றிகள்))))