மதியி லுதிக்குங் கவி

இன்னிசை வெண்பா

கண்ணிற் தவற்றினைக் காணின் ! மழைவந்து
மண்ணி லிலையசைய வீழின் ! பெருங்கவிஞர்
பண்ணுங் கவிகாதிற் கேட்கின் ! மனதினுளே
எண்ணற் றெழுமே கவி !

உதிரங் கொதித்திடுங் காலை ! யுணர்ச்சி
நதியாய்ப் பெருகிடும் நேரம் ! இயற்கை
விதியுந் தடம்புரள் காலம் ! ஒளியாய்
மதியி லுதிக்குங் கவி !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (5-Jun-15, 9:33 pm)
பார்வை : 120

மேலே