எல்லாம் மறந்தாயே

தனிமைத் தீ
என்னை சுடுகிறது
என் நினைவில் நீ
என்னை வாட்டுகிறது
மனிதன் யாவருக்கும்
மறதி இயற்கையே
ஆனால் நீ என்னை
மறத்தல் தகுமா??
உறக்கமும் உறங்கிவிட
நம் விழிகளில் காதல் வந்தாட
இரவினில் அலைபேசி
நம்மால் காதல்பேசி என்றானதை
எப்படி மறந்தாயோ?
மயில்கள் பலநூறு கடந்து
நேரங்கள் சில காத்திருந்து
உன் முகம் பார்த்து
நான் மதி மயங்கி
விழுந்ததை எப்படி மறந்தாயோ?
என் வாழ்வின்
ஓர் மழைக்காலமது
மார்போடு என்னை தழுவி
என்னை நீங்காதே
என்றுரைத்தாயே
அதை எப்படி மறந்தாயோ?
மாரூட்டிய தாய்
தன் சேயை மறப்பாளா?
இந்த கொடும்பாவியை
நீ எப்படி மறந்தாயோ?
தோல்வியுற்ற போது
உன் தோல்களிலும்
நோயுற்ற போது
உன் மடியிலும்
என்னை சுமந்தாயே!
எந்தாயே!
எல்லாம் மறந்தாயே!