என் கவிதை நீ

என்னவனே ………………!!!!!!!!!!!!!!!!!!!
உன் மீது நான் கொண்ட
காதலின் ஆழத்தையும்
உன்னால் நான் கொண்ட
காதலின் வலியையும்
உன்னை விட இவ்வுலகம்
நன்கு அறியும்
நான் எழுதுகின்ற
என் கவிதையின் வாயிலாக…
ஆனால்,
எனக்கு மட்டுமே தெரியும்
நீ மட்டும்தான் என்றும்
என் கவிதைகளின் நாயகன் என்று …..
என்னை போல் இவ்வுலகில்
உன்னை நேசிக்க யாருமில்லை என்பதை
ஒரு நாள் நீ என் காதல் வரிகளை
படிக்கும்போது அறிவாய்….
அன்று நீயும் என் கவிதைகளுக்கு
வாசகனாக மாறி என்னை நேசிப்பாய்
என் காதல் வரிகளுக்கு
சொந்தமானவன் நீ என்றும் ,
என் கவிதையின்
நாயகன் நீ என்றும் ,
என் கவிதைகளின்
ஆரம்பம் நீ என்றும்,
உன் நினைவுகளுடந்தான் இன்னும்
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
என்று தெரியாமல்………..