காலம் தாழ்த்தாதே
காதல் சொல்ல வந்தேன்
அதில் காலம் அழியா
கவிதை ஒன்றை கிறுக்கி வைத்தேன்
கிறுக்கனாக
முறுக்கிய வாய்
சுழித்து முகம் காட்டாமல்
போகிறாள்
போனவள் போனவள்
தான்
நான்
நின்ற இடம் மறந்தேன்
இவள் நிழல் பார்த்து
புன்னகைத்தால்
பூவுக்குள் வண்டாக
தென்றல் வீசி நிலா
அணையுதே
இவள் முகம் கேட்டு
மேகம் கரையுதே
மறைக்காதே மறைக்காதே
மனதை மறைக்காதே
மலரில் முத்தம் இடாதே
ஏற்க்கனவே வண்டுகள்
போதையில் செல்கின்றன
உன் இதழ் ரசம்
இனி இவன் பக்கம்
சிந்தி செல்வாயா