மாமன் மகள் மொழிகேட்டு பூரிப்பில் எழுதியது
எண்சீர் விருத்தம்
மழலையிது மழலையிலை தேவ கானம்
மழைமேக மாக்குகின்ற பசுமை கீதம்
குழலைவிட யாழைவிட இனிய ராகம்
குழையமுது கொஞ்சுகின்ற புதிய தாளம்
பழமறவர் செய்துவைத்த காவி யத்தின்
பாவின்பம் கொட்டுகின்ற கவிதை யூற்று
எழமறந்தேன் விழுந்தேனே மங்கை மொழியில்
எனதுமனம் பூரிக்க இன்னும் பேசு !
வித்தக இளங்கவி
விவேக்பாரதி