புங்குடுதீவின் முத்து ஒன்று

தீவின் முத்து ஒன்று
என்றுமே வழமை போலவே
தன்வீட்டில் உள்ள காலை
கடமைகளை முடித்து விட்டு
வீட்டில் உள்ள தன் செல்ல
பிரனைகளுடன் கொஞ்சி குழவி
விட்டு பாடசாலை நோக்கி சென்றது

நம்பிக்கையுடன் பாடசாலை சென்றாள்
வீடு திரும்புவேன் என்று என்ணி அவள்
ஆனல் பாடசாலை செல்லும் பாதி
வழியில் காத்து இருந்தது அவளுக்கு
கொடுமையின் பேரதிர்ச்சி அதுவே
அவளின் கடைசி பயணமும் குட

முதலில் ஐந்து குள்ள நரிகள் வழிமறித்தது அவளை
தூக்கி சென்றன அரளி மரங்கள் நடுவே
அவளை ஒன்று மாறி ஒன்றாக
கடித்து குதறின ஐயோ பாவம் அவள்
அம்மா,,,,,,அம்மா ,,,,,அம்மா
என்று கதறிய அவளின் மொவுன
சத்தமோ விண்ணை பிளர்ந்திருக்கும்

ஐந்து நரிகளுடன் மேலும் நரிகள் கூட்டம்
ஒன்று சேர்ந்து அவளை கடித்து குதறின
பாடசாலை நேரம் முடிந்தும் வீடு
திரும்பாத அந்த இளம் தளிரை
என்ணி அவள் தாயோ கலங்கினாள்

எங்கெங்கோ தேடி அலைந்தார்கள்
கிடைக்கவில்லை ஊரே சோகமயமானது
முதல் நாள் இரவுகளும் அவள் வீட்டில்
தூக்கம் இன்றி நகர்ந்து விடிகாலையும் ஆனது

விடிகாலை ஆனதும் ஊரே சேர்ந்து
நன்கு திசையும் தேடி அலைந்தன
பாடசாலை சென்ற அந்த பிள்ளைக்கு
என்ன நடந்திடுக்குமோ எங்கு சென்றிருப்பாள்
என்று எல்லாம் உரவர்கள் ஒருவர் மாறி
ஒருவராக தங்கள் வேதனைகளை பரிமாறிக்கொண்டு இருந்தார்கள்

இவள் படிக்கும் பாடசாலையோ இவளின்
வரவுக்காக சக தோழர்கலுடன் காத்து இருந்தது
அந்த நேரம் தான் இடி விழுந்தது போல்
பரவியது உலகம் முழுவதும் அவளின்
கொடுரமானா மரணச்செய்தி
இயற்கையும் குட தன் வழமையான
செயல்பாடுகளை ஒரு நிமிடம் நிறுத்தி கொண்டது

தங்கையை தேடிதிரிந்த அவளின் அண்ணன்
கண்களிலோ தென்பட்டது மங்கையின்
உயிர் அற்றசடலம் அவனோ என் தங்கையே ??????
என கதறியபடி அவன் ஒருநிமிடம் மயக்கம் உற்றான்
தங்கையின் வேதனைகளோடு மயக்கம் அற்று
தெளிந்தவன் மீண்டும் விண்ணை பிளக்கும்
அளவுக்கு என் தங்கையே என கதறினான்
கதறியசத்தம் கேட்டு ஒன்று கூடினார்கள்
தங்கையின் சடலத்தை சுற்றி விழிகள் நிறைந்த கண்ணீர் ஓடு

இயற்கையும் அவளின் பரணம் கண்டு சிறு துளி
மழையாக கண்ணீர் விட்டு அழத்தொடங்கியது
மனிதர்களிடம் இருந்து உயிர் பறிக்கும் அந்த
ஜெமன் கூட அவளின் மரணத்துக்கு சம்மதித்து இருக்கமாட்டான்
அனால் அந்த நரிக்கூட்டங்களோ அவளின் எண்அற்ற கனவுகளுடன்
இருந்த தங்கையின் உயிரை பறித்து கொண்டார்கள்
இன்றும் தொடர்கிறது விசாரணை என்னும் போர்வையில்
தடுப்பு காவலில் , நீதி தேவதையே என்மரணத்துக்கு
பதில் சொல்லையோ என்ற ஏக்கத்தோடு
ஏங்கிநிக்கிறது அந்த மங்கையின் ஆத்மா
எங்கும் இங்குமாக அலைந்து கொண்டே
இருக்கிறது ஒரு தீவின் முத்து
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உடுப்பிட்டி
மதனரூபன் [மதன்]
சவூதி அரபியாவில் இருந்து

எழுதியவர் : (7-Jun-15, 11:03 pm)
பார்வை : 205

மேலே