ஒற்றையடி பாதையில் ஒருவள் - தேன்மொழியன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒற்றையடி பாதையில் ஒருவள்
~~~~~~~~~~~~~~~~~~~~
களைகள் எடுக்கும் கழனிக்குள்
கதிரைத் தடவும் உன் கையில்
உயிரை உருக்கும் ராகமாய்
கலைகள் தெறிப்பது மாயமோ ..?
வாழை குலையை வெட்டுகையில்
குளவிக் கொட்டியதை மறந்து
குழவிச் சிரிக்கும் குணத்தை ..நீ
தேனில் குழைத்து தருவதேனடி...?
புது கூறைச் சேலை கட்டிக்கிட்டு
வீட்டுக் கூரை மேல நின்னுகிட்டு
பாரதி கவிதைப் படித்தவளாய் ..நீ
பாட்டியைத் திட்டுவது பாசமோ ..?
முன்... களத்து மேட்டில்
நெல் அடித்த நேரத்தில்
வெண்கல விளக்கால் ..என்
கன்னம் கிழித்ததைப் பாரடி ..?
ஏரிக்கரையின் எதிர்புறத்தில்
பெரும் முள் ஏறிய காலோடு
பட்டையுரிந்த பனைமரத்தில்...நீ
ஏறி விழுந்தது ஏனடி..?
- தேன்மொழியன்