எல்லாமே மாற்றம்தான்ஏற்றம்தான்

தோப்பில்லை துரவில்லை
தொடர்ந்துழவு செய்வதற்கோ
காப்பில்லை மழையில்லை
கரடாச்சு எம்வாழ்வு!

வாய்ப்பில்லை என்றால்தான்
வளர்,நிலங்கள் மனையாகும்
காய்ப்பில்லா இடமெல்லாம்
கட்டிடலாம் தொழிற்கூடம்!
மேய்ப்பாளர் தயவாலே
மேய்ப்பான நிலம் ,சென்று
தாய்ப்பாலை மறந்ததுபோல்
தாய்,நாட்டை மறந்திடலாம்!

வாய்ப்படைந்த கூலிகளாய்
வரலாறு படைத்திடலாம்!
ஏய்ப்பாளர் யாருமில்லை!
எல்லாமே மாற்றம்தான்!
இந்தியாவின் நாணயத்தில்
எழுந்துவரும் ஏற்றம்தான்!
== ++ ==

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (8-Jun-15, 9:58 am)
பார்வை : 792

மேலே