குற்றம் என்ன
கண்ணிற்கு அருகில்
ஆள்காட்டி விரலை வைத்து
பார்க்கையிலே
அது பெரிதாகவும்,
மற்ற அனைத்தையும்
மறைப்பதாகவும்
தெரியும்..
அதையே ..
சற்று தள்ளிப் பிடித்து பார்த்திட ..
உண்மை என்னவென்று புரியும் ..
அது மிகச் சிறியது என்றும் தெரியும்..
தன்முனைப்பு (ego ) கூட
அப்படித்தானோ..?
தன் பிழை என்றறிந்து
தன்முனைப்பு விடும்போது..
உண்மைகள் விளங்கும்..
உறவுகள் மலரும்..!
ஆள்காட்டி விரல்
மட்டும் அல்ல..
மொத்தக் கைகளிலும்
நாம் கொண்டு போவது
எதுவுமல்ல!
மனிதனாய் இருப்பதற்கு ..
மன்னிப்பதும்
மன்னிப்பு கேட்பதும்..
குற்றமல்ல !