வினாக்களுள் வாழ்க்கை
சிதைத்துக் கொள்ளவோ .. வாழ்க்கை
அன்றி வாழ்வை செதுக்கிடவோ?
விடை காண வேண்டியதோ வாழ்க்கை ..
அன்றி..வினாவாக்கிடவோ உன்னை?
இருப்பவனுக்கு சுகம் தரவோ வாழ்க்கை..
இல்லாதவனுக்கு கனவுதானோ அது?
காலத்தின் எண்ணிக்கையோ வாழ்க்கை..
வாழ்வு வாழப்படாமல் முடிப்பதற்கோ?
சங்கீதமாய் ஒலிப்பதற்கோ வாழ்க்கை..
சாக்காடு மட்டும் சேர்வதற்கோ?
ரசித்து வாழ்வதோ வாழ்க்கை..
அன்றி புசித்து செரிப்பதோ?