என்னை விட்டுவிடு

இனி மறந்து விடு
என்னை
மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்
உன்னை .....................

யார் தந்த தேகம்!
ஏன் இந்த மோகம்!
யாரை காப்பாற்ற என்னை
கையில் எடுக்கிறாய்?
நீ என்ன சிப்பாயா................
நாட்டை காப்பாற்ற..........

காந்தி கைவிட்டார் என்னை
இன்று - நீ
காலை , மதியம் என்று பாராமல்
என்னை காந்தியை
கொடுத்து வாங்குகிறாய்..........

இதயத்தின் அமைதி என்று சொல்லி
என்னை கையில் எடுக்கிறாய்,
உன்னை நம்பியுள்ள
இதயங்களை மறக்கிறாய்.............

உன் உழைப்பை
என்னிடம் தந்துவிட்டு
உலகத்தை மறக்கிறேன் என்று உளறுகிறாய்!
நாட்கள் இப்படியே சென்றால் - நீ
இந்த உலகத்தை விட்டே சென்றுவிடுவாய்!

அறிவியலில் கலக்க வேண்டிய என்னை
நீ அறிவில்லாமல் உன்னுள் கலந்து
இப்பிறவியை அழித்துகொள்கிறாய்........

இனிமேலாவது என்னை விட்டுவிடு,
உன் வியர்வை சுத்தமாகட்டும்...
சம்சாரம் வெறுக்கும் ......... சாராயம் ...........


என்றும் அன்புடன்
அ .மணி முருகன்

எழுதியவர் : (8-Jun-15, 3:41 pm)
Tanglish : ennai vittuviitu
பார்வை : 83

மேலே