போட்டி
ஓடும் நேரம் என்னுடன் சேர்ந்து ஓடும்
முந்து அவனை முந்து ரீங்கரிக்கும்
பல்லை கடித்து உடல் முறுக்கேறும்
மூச்சு இளைக்க முந்தி மனம் மகிழும்
போட்டி நினைவில் தூரம் பல கடந்ததும்
போட்டியாளர் விட்டு கொடுத்தது புரிந்ததும்
இன்னும் போட்டியிட யாருமில்லை என்றதும்
வெறுமை சூழ்ந்து சுவாசம் மறந்து துவளும்