கோ
கொக்கு அறு கோ
முருகன்
ஏன் ?
கொக்கு என்றால்
மா மரம்
மாமர வடிவில்
சூரன் நின்ற போது
அவனை அறுத்து
வதம் செய்கிறான் முருகன்
ஆதலினால் அவன்
கொக்கறு கோ
பின் அவனைச்
சேவல் கொடியாக்கி
கையில் பிடிக்கிறான் கந்தன்
கொக்கறு கோ கொக்கறு கோ
சேவல் தினம் வணங்குகிறது
தன் தேவனை
வணங்கும் சேவலை
தினம் அறுக்கிறான் மனிதன்
ஏன் ?
சூரா சம்காரம் தொடர்கிறதோ ?
___கவின் சாரலன்