நீயும் நானும் யாரோ

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று
என் நினைவில் இருந்து நீ சென்று
மனம் லேசானால் நன்றி உண்டு
நரை திரண்டு உடல் தளர்ந்து
போகும் முன் விழித்து கொண்டு
போன காலங்கள் இனி மறந்து
புத்தம்புதிதாய் பிறப்பேன் இன்று .....

எழுதியவர் : கார்முகில் (10-Jun-15, 6:32 pm)
Tanglish : neeyum naanum yaro
பார்வை : 85

மேலே