ஒற்றை முத்தத்தில்

காற்றாகினேன் உன்னோடு கலந்தாடவே
ஏற்றாலும் உன் கண்கள் காணவில்லையே
நீராகினேன் நனைந்தாடவே
நிறைத்தாலும் உன்னோடு நிற்கவில்லையே
நெருப்பாகினேன் நினைத்தூண்டவே
ரசித்தாலும் அருகினில் சேரவில்லையே
நிலமாகினேன் உனைத்தாங்கவே
கிடைத்தாலும் உனை அறியவில்லையே
ஆகாயமதுவாமகினேனன் இருந்தாலும்
உன்னை அடையவில்லையே
இடமாகி இடைவெளியும் நீங்கலாகி
இணைந்தாயடி - உனதாகிப்போகிறேன்
உன் ஒற்றை முத்தத்தில்தானே

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (11-Jun-15, 11:38 am)
பார்வை : 81

மேலே