நட்புக்கு அவசியம் அன்று

அருகில் இருப்பத்தோ ...
முகம் பார்பதோ
நெருங்கி பழகுவதோ ...
நட்புக்கு அவசியம் அன்று ....!!!

எண்ணத்தால் ....
உன்னை நான் நினைப்பதும் ...
என்னை நீ நினைப்பதும் ...
உண்மை நட்பின் அடையாளமே ...!!!
+
குறள் 785
+
நட்பு
+
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 05

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 12:27 pm)
பார்வை : 294

மேலே