கல்யாணம்
அகப்பூ சூடி மணப்பந்தலில் அமரும் அகவாளனின்
அயற்படல் செல்லா அகமுடையாள் - அவள்
ஆகலநம் கொள்ள இவன் இடும் மாலை
ஈனோர் கண்டு உக்களி உண்டு
சிறுத்துப்போகும் ஊசிக்கன்., திருமணம் கண்ட அவர்களுக்கு...
எழிலிய இருவரும் ஏகசிந்தனை கொண்டு.,
ஐமிச்சம் தவிர்த்து ஓச்சம் கொண்டு,.
ஓபு மூடி ஔதசியம் உண்டு இவர்கள் தொடங்கும்
திருமண வாழ்க்கை இனிதே உதயமாக
எங்களது வாழ்த்துக்கள்...!