கனவில் நானும் காதலன்
வெற்றி களிப்பில், சிறு
வெற்றிடம்... உன்னால்
தோல்வி கணத்தில், விடைதெரியா
கேள்விகள்... உன்னால்
சிரிப்பில்கூட சிறு பொய்
சேர்ந்துவிட்டது... உன்னால்
அழுகையின் ஆயுள், நீண்டுகொண்டே
போனது... உன்னால்
பாதையில்லா கடலில், படகாய்
பயணம்... உன்னால்
பயனற்ற பயணத்தில், பயணியாய்
மாறிவிட்டேன்... உன்னால்
இமய இலக்குகள் எல்லாம்
இளகிவிட்டன... உன்னால்
நானும் மற்றவரும், ஒவ்வொருவருகொருவர்
விசித்திரமானோம்... உன்னால்
காக்கை சத்தம் காதைகிழிக்க,
விழித்தேன்... விடியும்முன்னால்
கனவில்நானும் காதலனாய், மாறியதறிந்தென்
கண்விழித்த பின்னால்...