உனையே யாசிக்கிறேன்

இனிக்க இனிக்க தொடரும் கவியாய்
உன்னோடு இருந்திடும் நொடிகள்...
விலகி இருக்க இயலவில்லை - என்னால்
உன் ஞாபக சுழல்களை விட்டும்...

வலிக்கவில்லை எந்த காயமும் - நீ
மருந்தாகி என்னில் மையலிட்ட பின்...
சலிக்கவில்லை ஏதொரு நிமிடமும்
என் பொழுதுகளை நீ கொள்ளையிட்ட பின்...

எனக்குள் ஒளிந்திருந்த உன்னை
நீ எனக்கே அறிமுகம் செய்தாய்....
ஓர் முத்தத்தின் அர்த்தத்தை - நீயே
அழகாக வரைவிலக்கணம் செய்தாய்...

வார்த்தையில் கோர்த்திட முடியா
பேரன்பை உன் மீது வைத்தே,
வரிகளால் ஓர் துளியையே அதில்,
நான் இங்கு தூவிப் போகிறேன்...

உயிருக்கும் மேலாக - நான்
உன் உயிரையே நேசிக்கிறேன்..
அனைதுறவுக்கும் மேலாக - நான்
உன் உள்ளத்தையே யாசிக்கிறேன்...

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (11-Jun-15, 9:04 pm)
Tanglish : unaiye yaasikkiren
பார்வை : 370

மேலே