பொள்ளாச்சி அபி சிறுகதைத் திறனாய்வுப் போட்டி - தல புராணம்

இக்கதை எனக்குள் பயணிக்கும் விசயங்களுக்கு முன் கதை பற்றிய படைப்பாளியின் முன்னுரையைத் (சிறு-நெடுங்-கதை) தகர்த்து சட்டெனப் பயணிக்கச் செய்ததாகவே உணர்கிறேன்.

ஒருவேளை வாசிப்புகளுக்கு மிகையான படைத்தலை சாத்தியமாக்கிய இன்றைய தலைமுறைச் சவாலின் பொருட்டு அவரால் சொல்லப்பட்டதாக இருக்கலாம். சரி கதைக்கு வருவோம்..

இந்த வாசிப்பு, காரில் சென்று இளநீர் குடித்து விட்டுப்பின் கொய்யாப் பழங்களை கடித்துத் தின்றபடியே போய் ஒரு கோயில் கதை கேட்டுத் திளைத்த அனுபமே தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அப்படியான அனுபவத்தை வாசகனுக்குக் கொடுப்பதில் தெளிகிறது படைப்பாளியின் சூட்சுமம்.

இது வரலாறுகளைச் சரிவர அறியாமலே/ கேள்வி கேட்காமலே வழங்கிப் புழங்கும் சரித்திரக் கட்டுகளுக்குள் இன்றைய மனிதனையும் கலக்கிக் கொடுத்த எதார்த்தக் கதை. வலுக்கட்டாயமான திருப்பங்களை உள்வாங்கிக் கொள்ள மனமில்லாத வாசகரை படைப்பாளி உணர்ந்த விதம் நிம்மதியளிக்கிறது. ஆயினும் திருப்பங்கள் இல்லாமலில்லை.

கதை பயணிக்கத் தொடங்கியதிலிருந்து எந்தக் காட்சியும் வாசகனின் மனக் கண்களுக்கு விடுபடுவ வாய்ப்பிருப்பதாய் தெரியவில்லை. இது இன்றைய கதை சொல்லலின் மீதான நூதனமான படைப்பாளியின் முனைப்பைக் காட்டுகிறது.

ஒரு கதை, வாசிப்பவர் முன்னால் நடப்பதாகத் தோன்ற வைப்பதில் தன்னிலை கொள்கிறது அந்தப் படைப்பாளியின் பெரும் பிரயர்த்தனங்கள். இந்தப் படைப்பு வாசகருக்கான வாழ்வியலை தன்னகத்தே அடுக்கி நிற்கிறது வழியெங்கும்...

கதை மாந்தர் வழிப் படிப்பினைகளைப் பட்டியலேயிடலாம்.....சில,

வண்டி ஓட்டும்போது குழந்தைகள் எப்படி இருக்க வேண்டுமென்பது.

சாலையில் சாய்ந்து விழும் இன்னொரு உயிரைக் கவனிப்பது. உதவுவது.

குளிர்பானங்களை விட இளநீர் உட்கொள்வது.

கதை கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் முன் சிந்திக்க வேண்டியது.

கற்பனைகளை 500 க்கு 50 என ஒரு முட்டையில் கோட்டை விடுவது

இப்படியின்னும்..........

முக்கியமாக ராஜாக்களோ (அ) சகமனிதனோ தன் மேலாதிக்க மனநிலையில் செய்யும் வல்லுறவு அட்டூழியங்களையும் அதன் மீதான பொத்தாம் பொதுவான மழுங்கடிப்புகளையும் பளிச்சென்று நிறுத்திச் சொல்கிறது படைப்பு.

ஆயினும் எல்லோரும் எதிர்த்துப் போராடி காளியாகவோ/மகேஸ்வரியாகவோ ஆவதில்லை என்பதே காணக் கிடைக்கும் எதார்த்த இயலாமையின் உச்சம்...வெட்கம்.....

அட்டூழியம் செய்பவனை அழித்த பின்னும், அதன்பொருட்டு மகேஸ்வரி சிரமப்படுவது போலதான வாழ்க்கையை அமைத்தது சற்று நெருடுகிறது இதயத்தை, முன் சொன்ன இயலாமைகளைப் போலவே.

மேலும் பூசாரியிடம் கதை கேட்கும் வைபோகத்தில், அந்தக் குழந்தைகள் இடம்பெறாதது எனக்குச் சற்று ஏமாற்றமளிக்கிறது. நாளைய சமூகத்தின் வழிகளில் உடைக்கப் பட வேண்டிய கட்டுகளுக்காக அவர்களின் பங்கையும் படைப்பாளி அளித்திருந்தால் இன்னும் சிறந்திருக்குமென்பது வாசிக்கையில் எனக்குள்ளெழுந்த எதிர்பார்ப்பு...

சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, வல்லுறவைக் கொல்லும் வலிமையான ஆயுதம் வளரும் தலைமுறையின் வளர்ப்பில் இருக்கிறதென எண்ணுவதே அதன் மூல காரணம்.

இறுதியில் உறுதியாக,
உள்ளீட்டுச் சுவைகளில் வாழ்வியலையும் தார்மீகங்களையும் ஏந்திய கதைகளைக் கொண்டாட மனமில்லாத இதே சமூகம்தான், சுயலாபப் பாங்கோடோ அல்லது சுயம் நிரப்பியோ சரித்திரம் மற்றும் புரிந்திடாத கதைகளை நேர்த்தியாக(?) ஊர்வலம் அனுப்புவதையும் வயிறு வளர்ப்பதையும் பெரும் சாடலாக நிறுத்திப் பார்க்கிறதெனக் கருத்தில் கொள்ள வைக்கிறது, இப்படைப்பு......கதை.....

வாசியுங்கள் .......

-முற்றும்-

//////////////////
இக்கட்டுரை என்னால் எழுதப்பட்டது என்று உறுதியளிக்கிறேன் ...

-சர் நா

////////////////

எழுதியவர் : சர் நா (13-Jun-15, 3:59 pm)
பார்வை : 162

சிறந்த கட்டுரைகள்

மேலே