தாய் மனசு

மேனி குறுகி
நடை தளர்ந்து
கைத்தடி பற்றி
நடந்து சென்றால்
மூதாட்டி ...

நான் வினவ
பள்ளி செல்லும்
பேரன் பேத்திகளை
பார்க்க என்று
பதில் வர ...

அந்த நேரம் அவ்வழியே
வேகமாய் சென்ற கார்
மூதாட்டியை இடித்தது

காரில் வந்தது அவளின்
மகனும் மருமகளும்
பணத்தை கொடுத்து

என்னிடம் தர்ம ஆஸ்பத்திரியில்
சேருங்கள் என்று சொல்லிவிட்டு
காரில் ஏறி பறந்தனர் ..

சற்று தொலைவில்
கார் விபத்தில் சிக்கி
காயமடைந்தனர் ...

மூதாட்டி என்னிடம்
பணத்தை கொடுத்து
அவர்களை காப்பாற்றுங்கள்
என்று சொன்னாள் ...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (14-Jun-15, 10:59 am)
Tanglish : thaay manasu
பார்வை : 616

மேலே