கெட்டாலும்

என்ன
ழூக்குங்க..
ழூக்குங்க..
அம்ம..
..
தன்னை மீறி
குடித்து விட்டு
தனது சோகங்களை
சாலையில் இறைத்து விட்டு
யாரோ இருவர் தூக்கி வந்து
வீட்டில் போட்டு போனபின்
..
என்ன
ழூக்குங்க..
ழூக்குங்க..
அம்ம..
..

என்று புரண்ட மகனை..
மடியினில் ஏந்தி..
அவன் அம்மா அழுதது ..
..
ஐயோ..எம்புள்ள
தங்கமாச்சே ..
..
பாவிமவணுவ..
இப்படி ஆக்கிட்டானுகளே ..!
..
அவளுக்காகவாவது
அவன் திருந்த
வேண்டுமென எண்ணி
தலையை தொங்க போட்டபடி
நகர்ந்தது..
அவன் வீட்டு நாய் ஒன்று!

#support nandhini #

எழுதியவர் : கருணா (16-Jun-15, 11:00 am)
பார்வை : 114

மேலே