விற்பனை

விலையில்லா
மின்விசிறி
விலையில்லா
தொலைக்காட்சி
விலையில்லா
கிரைண்டர்
விலையில்லா
மிக்சி
வழமையாய் வாங்கும்
ரேஷன் கடையிலும்
தெருமுக்கு
முத்தண்ணன்
கடையிலும்
கொள்ளை
இலாபமீட்டும்
கிம்பானி சூப்பர்
மார்கெட்டிலும்
உருளைகளில் அடைத்து
விற்பனைக்கு வந்தது
O2 எனும் உயிர்வளி
உலகின் கடைசி
மரமும் வெட்டுண்டு
வாகனத்தில்
ஏற்றப்பட்டபோது.

எழுதியவர் : தர்மராஜ் (14-Jun-15, 2:31 pm)
Tanglish : virpanai
பார்வை : 365

மேலே